உணவுக்கான பணவீக்கம் உயர்வடையும் சாத்தியம்

தேசிய நுகர்வோர் விலை குறியீட்டு எண் படி, இம்மாதம் உணவு பணவீக்கம் 23 சதவீதத்தை தாண்டும் என, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவுப் பணவீக்கம் கடந்த ஒக்டோபரில் 11.7 சதவீதமாகவும், நவம்பரில் 16.9 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையில், இது 5.2 சதவீதம் அதிகமாகும். அத்துடன், நவம்பர் மாதத்தை விட டிசம்பரில் பணவீக்கம் 6.1 சதவீதம் அதிகமாக உயர்வடைந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தை விட 5.2 சதவீதம் அதிகமாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவுக்கான பணவீக்கம் உயர்வடையும் சாத்தியம்

Social Share

Leave a Reply