பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் சுமார் 100-150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லாதமையின் காரணமாக, விளைச்சல் குறைவதால் உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் அரிசி, மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், உணவு தட்டுப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, மியான்மரில் இருந்து கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அதுதவிர, வேறு சில உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறினார்.