‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்த வேண்டும்’ – ரணில்

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றில், நாணய மாற்று விகிதப் பிரச்சினை மோசமான நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களை துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்நிய செலாவணி விகிதப் பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது அதற்கு சாத்தியமான வேறு மாற்றீட்டைக் கொண்டு வர வேண்டும். ஆனால் அது எதையும் செய்ய அரசாங்கம் தவறிவிட்டது எனத் தெரிவித்தார்.

மேலும், புத்தாண்டில் இலங்கை உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவுள்ளது என்றும், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை கடன் வசதி ஊடாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது. எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்திடப்பட வேண்டும் என அவர் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version