ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி திங்கடகிழமை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமயகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், போரில் கொள்ளப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களும் இந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படுவதனால் இந்தக்கூட்ட தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமைகிறது.
நாளையதினம் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களையும், நிலவரத்தினையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் வாய்மூல அறிக்கையாக வெளியிடுவார். இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல வல்லரசு நாடுகள் உரையாற்றவுள்ளன. இந்த கூட்ட தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் கொள்ளப்பட்டதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் நியாயம் கிடைக்குமென தமிழ் தரப்புகள் நீண்ட நாட்களாக காத்திருப்பதும், அங்கே இலங்கை அரசுக்கு எதிராக முடிவுகள் ஏதும் வந்துவிட்டால் அது சிக்கல் நிலைமைகளை தோற்றுவிக்குமென அரசு தரப்பு அதற்கு ஏற்றால் போல இராஜதந்திர விடயங்களை நகர்த்தி செல்வதுமாக கடந்த பல வருடங்கள் நகர்ந்து செல்கின்றமை சுட்டிக்காட்த்தக்கது.