15 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (03/12) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் இளைஞர்களின் கல்வி, தொழில் மற்றும் ஏனைய பிற தகுதிகள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கி டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு இந்த அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞலர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதிகள் என்பன குறித்த அடையாள அட்டைகளில் உள்வாங்கப்படுகின்றமையால், தரவு வங்கி முறைமை போல் இதனை உபயோகப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இன்று முதல் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் எதிர்வரும் நாட்களில் தேசிய இளைஞர்கள் சேவை சங்கத்தினரால் முழுமையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
