பெரும்போகத்திற்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
உரப் பற்றாக்குறையினால் விவசாயிகள் எதிர்நோக்கிய சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் கண்டியில் நேற்று (02/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
