இவ்வருடத்தில் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை இலங்கையர்களுக்குப் பார்வையிடக்கூடிய சந்தர்ப்பம் இன்று (03/01) கிடைக்கவுள்ளது.
ஆதர் சி கிளார்க் மையம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய விண்வெளியிலிருந்து 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழுவதனை இன்று பார்வையிட முடியும் என்பதுடன், நாளை (04ஃ01) அதிகாலை 2 மணிக்கு அதனை தெளிவாக பார்வையிட முடியுமென்றும் ஆதர் சி கிளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேடமாக பார்வையிட முடியும் என்பதுடன், ஏனைய மகாணங்களில் தெளிவான வானிலையுள்ள பகுதிகளில் இதனை பார்வையிடலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
