பிரியந்தவின் குடும்பத்திற்கு நிதியுதவி

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தொழில்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அதற்கான காசோலையை நேற்று (03/01) வழங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, பிரியந்தவின் பிள்ளைகளின் கல்வி செலவுகளை தாம் ஏற்பதாக சியால்கோட் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரியந்தவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 85 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க குஜரன்வால பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரியந்தவின் குடும்பத்திற்கு நிதியுதவி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version