இளைஞர் ஒருவர் குத்தி கொலை

டிக் டொக் வீடியோ காரணமாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் வைத்து 17 வயது இளைஞன் நேற்று (03/01) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குறித்த இளைஞன், தனது நண்பர்கள் இருவருடன் மாதம்பிட்டிய வீதியில் உள்ள ஹேனமுல்ல ரன் திய உயன அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, பிறிதொரு குழுவினர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த குழுவினர் டிக் டொக் வீடியோ ஒன்றினால் ஏற்பட்டிருந்த தகராறு காரணமாக, குறித்த இளைஞரை கத்தியால் குத்தி, அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேக நபர்களை கைது செய்து, மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் குத்தி கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version