டெங்கு அபாயம் நிலவும் 15 மாவட்டங்களில் இன்று (04/01) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
