மகாவலி கங்கையை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவை மகாவலி கங்கையை வந்தடைவதால், மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலாஓயா, மட்டக்களப்பு – முந்தானையாறு ஆகியவற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளமையின் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
