மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டின் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஷேக் பந்தார் பின் மொஹமட் பின் சௌத் அல்தானியை நேற்று முன்தினம் (04/01) சந்தித்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு நிதி உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.