வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை வழக்கு

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வழக்கை ஜனவரி 12ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆராச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற விசேட நீதிபதிகள் குழாமினால் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (06/01) எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த வழக்கை ஒத்தி வைக்க நீதிபதிகள் ஆயம் தீர்மானித்து வழக்கை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 8 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை வழக்கு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version