காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுளளதாக அறிய முடிந்துள்ளது.

மன்னார் கோட்டை பகுதியில், பெண் ஒருவர் மதிய உணவு சமைக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. சிலிண்டர் வெடித்ததனை தொடர்ந்து தீ பரவியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயங்கள் எதுவும் அந்த பெண்ணுக்கு ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி பகுதியிலும் காஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை, மயில்வாகனபுரம் பகுதியில் பெண் ஒருவர் சமையல் செய்யும் போது சிலிண்டர் வெடித்துளளது. இந்த சம்பவத்திலும் எவருக்கும் உடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

காஸ் வெடிப்பு அதிகரிக்கிறது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version