திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா IOC நிறுவனம் மற்றும் Trinco Petroleum Terminal (Pvt) Ltd ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.