அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்

திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (06/01) அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் திறப்பு விழா நிகழ்வின்போது கலந்து கொண்ட அமைச்சரிடம் இவ்விடயத்தை தேரர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதற்கு ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் ஜாதிக சங்விதானய அமைப்புக்கள் தங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. ஆனாலும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள் இருந்தபோதிலும் திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு தாம் தயாராக இருக்கின்றோம் என்றும், தேசிய சொத்துக்களை பாதுகாக்காவிட்டால் வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், நேற்றைய விழாவிற்காக வருகை தந்திருந்த தேரர்கள் கூட்டாக இணைந்து இக்கோரிக்கையை ஊடகத் துறை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

(திருகோணமலை நிருபர்)

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version