ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் மறைந்த S.W.R.D பண்டாரநாயக்கவின் 123ஆவது ஜனன தின உற்சவம் நேற்று (08/01) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் காலேமுவடொர மைதானத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
