இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் தோட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு காணி வழங்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் (07/01) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, ஒவ்வொருவருக்கும் தலா ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
தோட்ட மக்களுக்கு இவ்வாறு காணி வழங்கும் செயற்பாடுகள் கடந்த 200 வருடங்களில் நடந்ததில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
