விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய குறித்த யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் அல்ஹகோல் உற்பத்தி குறித்த தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
