இன்று(10.01) முதல் மறு அறிவித்தல் வரை ஒரு மணி நேரம் தொடக்கம் இரண்டு மணி நேரம் வரையிலான மின் தடை அமுலாக்களுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சாரசபை முன் வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்கு பாவிக்கப்படும் பியூரன்ஸ் ஒயில் தட்டுப்பாடு காரணமாகவே இந்த மின் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடு பூராகவும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரையான நேரப்பகுதிக்கு மின் துண்டிக்கப்படவுள்ளது.
கடந்த நாடுகளிலும் இந்த ஒயில் தட்டுப்பாடு காரணமாகவே மின் தடை அமுல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
