கொழும்பு துறைமுக நடைப்பாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (10/01) முதல் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைப்பாதை 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்புத் துறைமுக நகர நுழைவாயில் ஊடாக உட்பிரவேசிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது, குறித்த நடைபாதை நேற்று (09/01) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயினால் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நடைப்பாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version