செய்தித் தாள்களை அச்சிடும் காகிதங்களுக்குத் தட்டுப்பாடு

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலர் தட்டுப்பாடு காரணமாகவும், சர்வதேச அளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவும், காகிதங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரு டொன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

செய்தித் தாள்களை அச்சிடும் காகிதங்களுக்குத் தட்டுப்பாடு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version