இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (10/01) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தும் மூதூரிலிருந்து சேறுவில நோக்கி சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்கள் வருகை தந்ததாகவும் இதுவரைக்கும் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(திருகோணமலை நிருபர்)

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version