தற்போதைய சூழலில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10/01) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனத்தின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து, தடையின்றி தேவையான எண்ணெய்யை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
