முன்நாள் வடமாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவினை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு பதிவு செய்த அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சி.வி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி எனும் கட்சியினை ஆரம்பித்திருந்தார். அந்த கட்சியானது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எனும் நான்கு கட்சிகள் இணைந்த கூட்டணியாக கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
மூன்று கட்சிகள் இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் உள்ளடங்குகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதனை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புதிய லங்கா சுதந்திர கட்சி எனும் கட்சியும் தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
