சீனாவின் கருப்பு பட்டியலிலிருந்த மக்கள் வங்கி, கருப்பு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து சேதன பசளை வாங்கியதற்கான பணத்தினை இலங்கை மக்கள் வங்கி வழங்காமல் தடை செய்து வைத்துள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட சேதன பசளை தரமானதாக இல்லை என்ற காரணத்தினால் அவை திருப்பியனுப்பட்டன. அந்த சர்ச்சைகளின் போது பணத்தினை வழங்க வேண்டிய மக்கள் வங்கிக்கு பணத்தினை வழங்கவேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்கு இணங்க அந்த பண பெறுமதியினை மக்கள் வங்கி தடை செய்தது.
அதனை தொடர்ந்து குறித்த பசளைகளை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனம் முறைப்பாடு செய்ததனை தொடந்து மக்கள் வங்கி சீனாவின் கருப்பு பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் சீனாவுடனான எந்த கொடுக்கல் வாங்கல்களையும் மக்கள் வங்கி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அண்மையில் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்ததனை தொடர்ந்து, சீனாவின் உதவி திட்டங்களும், சீன, இலங்கை நாடுகளுக்கிடையில் காணப்பட்ட சிக்கல் நிலைகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.
