தமிழரசு கட்சியின் பிரசன்னம் தமிழ் கட்சிகளின் இணைவில் வெற்றியே – சுரேஷ்

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கான ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கின. தமீழ விடுதலை இயக்கம்(டெலோ) ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் பல இணைந்து இந்த பணிகளை ஆரம்பித்தன.

இறுதியில் வடக்கு,கிழக்கு பிரச்சினைகள் சம்மந்தபப்ட்ட விடயங்களை உள்ளடக்கிய கடிதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் கடித்தமாக குறித்த ஆவணம் மாற்றம் பெற்றது. இந்த நிலையில் பிரிந்து நிற்கின்ற தமிழ் கட்சிகளது இணைவு ஒரு சாதகமான விடயமாக பார்க்கப்பட்டது.

இந்த இணைவில் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி இணைந்திருக்கவில்லை. பின்னர் அவர்கள் இணைந்ததோடு கடித தயாரிப்பிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் “இந்த இணைவில் தமிழரசுக் கட்சியினை உள்கொண்டுவதந்தது வெற்றியே” என ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

“தமிழ் கட்சிகள் இணைந்து ஆரம்பித்த இந்த நடவடிக்கையில் தமிழரசுக்கட்சி ஆர்வத்தை காட்டவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளே வந்ததனாலும், மனோ கணேசனுடன் இணைந்து இந்த இணைவு முன்னோக்கி சென்றுவிடும் என்ற அழுத்தத்தினாலுமே, இரா.சம்மந்தனும், தமிழரசுக் கட்சியும் உள்ளே வந்தார்கள்” எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைகள் தொடர்பில், இந்த செயற்பாடு வெற்றிகரமானதாகவே அமைந்துள்ளது” எனவும், இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த கடிதம் கொண்டு செல்லப்படுமெனவும், இதன் மூலமாக முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெறுவமெனவும் தனது நம்பிக்கையை வெளியிட்ட அவர், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் பிரச்சினைகளும் அவர்களது மக்களுக்கான கோரிக்கைகளும் வேறு. வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு. ஆகவே இந்த ஆவண தயாரிப்பில் அவர்கள் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனவும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழரசு கட்சியின் பிரசன்னம் தமிழ் கட்சிகளின் இணைவில் வெற்றியே - சுரேஷ்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version