பிரதான சந்தேக நபர் அடையாளம்

கொழும்பு – பொரளை பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு (11/01) மீட்கப்பட்டிருந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒருவர் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

முந்திய செய்தி

கொழும்பிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொழும்பு பொரளை பகுதியில், மகசீன் சிறைச்சாலைக்கு முன்னதாக உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. குண்டினை செயலிழக்க செய்வதறகான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தேவாலயங்கள் மீதான ஈஸ்டர் குண்டு தாக்குதல், தேவாலயங்கள் மீதான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற வதந்திகள் அல்லது, சந்தேகத்துக்குமிடமான தகவல்கள் தொடர்பில் இந்த சம்பவம் மூலம் பொலிஸார் அதிக கவனம் செலுத்தவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் அடையாளம்
Photo Credit – Ada Derana
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version