பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12/01) மழையுடனான வாநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version