மனோவின் விசாரணை நிறைவு

ஊழலை விசாரித்தவர்களை விசாரிக்கும் ஆணைக்குழுவே இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை மேற்கொண்டதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவல்ல என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊழல் செய்தவர்களை இங்கே விசாரிக்கவில்லை. ஊழல் செய்தவர்களை விசாரித்தவர்களை விசாரிக்கிறார்கள். வேடிக்கையாக உள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் வேடிக்கையான விடயங்களில் இதுவுமொன்று தெரிவித்தத மனோ MP , தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு தமிழ் மொழியில் பதில் சொன்னதாகவும், அவர் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, விசாரணை செய்தவர்களுக்கு பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் மூலம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு கூறப்பட்டதாகவும், அதனை பின்னர் தட்டச்சு செய்து, சிங்கள மொழியில் மாற்றப்பட்டு கையொப்பமிட கேட்டபோது தான் மறுத்தததாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் உள்ளதனை தன்னால் கையொப்பமிட மறுத்ததன் காரணமாக பிறிதொரு தினத்தில், தனக்கு ஏற்ற தினத்தில் விசாரணைக்கு வருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளதாகவும், அன்றைய தினத்தில் விசாரணையை நடாத்த விசாரணை குழு ஒத்துக்கொண்டுதாகவும் தெரிவித்த அவர், மொழிச் சட்டம் மீறப்பட்டுள்ளமையினால் கையெழுத்திட மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

மனோவின் விசாரணை நிறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version