கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக H.D கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பீடாதிபதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை செயற்பட்ட பேராசிரியர் H.D.கருணாரத்ன பொருளியல் கற்கை பிரிவின் முன்னாள் தலைவருமாவார்.
இவர் உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளதுடன், பிரபல்யமான பொருளியல் நிபுணரான அவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.