அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையானது, அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 120 கிலோமீற்றர் பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகையிரத பாதையில் புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன.
மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
