கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்

கொழும்பு நகர எல்லையில் 2,746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதாக தாம் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குள் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமானப் பணிகள் இடம்பெறும் இடங்கள் போன்றவற்றில் வசிக்கும் சகல தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை சேகரிப்பதற்காக மேல் மாகாண பொலிஸ் பிரிவு ஜனவரி 14ஆம், 15ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நாள் விசேட நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் கொழும்பில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, குடியிருப்போரின் தகவல்களை சேகரிக்க 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது அப்பகுதியில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த சரியான தகவல்களை உள்ளீடு செய்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடமோ அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திலோ பொதுமக்கள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது மேல் மாகாணத்திற்கு வெளியில் தங்கி தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் 106,126 தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை அதிகாரிகள் சேகரித்ததாக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version