வவுனியாவில் பாரிய தீ விபத்து

வவுனியா, நகரத்தை அண்டிய வைரவர் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரபல்யமான மதுபானசாலை (Bar & Restaurant) எம்பயர் ஹோட்டல் இன்று (20.01) அதிகாலை 3.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த ஹோட்டல் சில வருடங்களுக்கு முன்னர் உரிமை மாற்றப்பட்டு, பல லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்டு நடாத்தப்பட்டு வந்த நிலையில் இந்த தீ விபத்தின் மூலம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

முழுமையாக மரத்தினால் கட்டப்பட்டிருந்த மேல் மாடி பகுதி முழுமையாக எரிந்துள்ளது. ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்ட பண்டைய வேலைப்பாடுகள் மற்றும் கட்டிட அமைப்புகளை கொண்ட கட்டிடமாக இது இருந்தது.

தீயிற்க்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு படையினரின் நீண்ட போராட்டத்துக்கு பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ மிகவும் பெரியளவில் காணப்பட்டதனால் குறித்த பகுதியின் மின்சாரமும் துண்டிக்கபப்ட்டிருந்தது.

வவுனியாவில் பாரிய தீ விபத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version