UNDP அதிகாரிகள் முல்லைத்தீவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வு!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

UNDP அதிகாரிகள் முல்லைத்தீவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்தனர்.

இதன்போது பொருளாதார நெருக்கடி, விவசாயம், காணி பிரச்சினை, வீட்டுத் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்.


இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், UNDP அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பல்வேறுதரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version