இளைஞர்களது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக மாறும்

இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் நல்ல வேலைகளை உரிய நல்ல இடங்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து அவர்கள் தனிப்பட முன்னேறினால் நாடு முன்னேறும்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டி தருவது ஆடை ஏற்றுமதி. அப்படியினால் ஆடை தொழிற்சாலைகள் நட்டமடையாது. கொரோனா காலத்தில் கூட ஆடை தொழிற்சாலைகள் இயங்கின. அதன் காரணமாக ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பொருளதாரத்தில் பின்னடைவை சந்திக்கவில்லை. தற்போதைய பொருளாதர நிலையிலும் அவ்வாறான நிலை காணப்படுகிறது.

பொருளாதர சிக்கலான நிலையில் சேமிப்பு முக்கியமானது. அந்த சேமிப்பை வைத்திருக்கும் இளைஞன் தன்னுடைய முன்னேற்ற கதையினை கூறுகிறார். மூன்று வருடங்கள் வேலை செய்து தொழிலில் பதவி உயர்வு. வங்கியில் சேமிப்பு. வாகனங்கள் என தன்னுடைய வாழக்கையினை உயர்த்திச் செல்லும் இளைஞன் தன்னுடைய முன்னேற்றம் உருவான விதத்தை கூறுகிறார்.

Social Share

Leave a Reply