ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறுமென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார சிக்கல்கள் காரணமாக இலங்கையில் ஆசிய கிண்ணத்தினை நடாத்த முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன.
இன்று இந்தியா அஹமதாபாத்தில் நடைபெற்ற ஆசிய வலய கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்தில் இலங்கையிலேய போட்டிகளை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கோரிக்கைக்கு அமைய தொடர் ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. முதலில் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆசிய கிண்ணம் இலங்கையை விட்டு வேறிடத்துக்கு மாற்றினால் இலங்கைக்கு தற்போது தேவைப்படுகின்ற அந்நிய செல்வாவணி இல்லாமல் போகும்.
இலங்கை கிரிக்கெட்டுக்கும், நாட்டுக்கும் உதவும் முகமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அல்லது பின்னதாக இந்தியா அணி இரண்டு 20-20 போட்டிகளில் இலங்கை அணியோடு விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
