பிரதமர் ரணில் வீட்டின் முன்னாள் கண்ணீர் குண்டு தாக்குதல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு, கொள்ளுப்பிட்டி வீட்டின் முன் போராட்டம் நடைபெறுவதாகவும், போராட்ட காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்றவற்றினை கைப்பற்றிய மக்கள், மாலை வேளையில் அலரி மாளிகையினையும் கைப்பற்றியிருந்தார்கள்.

மாலையில் நடைபெற்ற கட்சி தலைவர்களது கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகல் தொடர்பில் குழப்பமான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவரது வீட்டின் முன்னாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தனர். சர்வ மத தலைவர்கள் மற்றும் கோட்டா கோ ஹம போராட்ட கார்களும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.

பிரதமர் ரணில் வீட்டின் முன்னாள் கண்ணீர் குண்டு தாக்குதல்
பிரதமர் ரணில் வீட்டின் முன்னாள் கண்ணீர் குண்டு தாக்குதல்

Social Share

Leave a Reply