புளொட் அமைப்பின் தேசிய மாநாடு, புதிய நிர்வாகம்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம்(04.08) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா தனியார் மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றப்பட்டதுடன் புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றது. மாநாட்டில் தமிழ் கட்சிகளது தலைவர்களும் கலந்து கொண்டதுடன் புளொட் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை நேற்று புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும், பொருளாளராக க.சிவநேசனும், ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும் சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன் தீர்மானங்களும் எட்டப்பட்டது.

புளொட் அமைப்பின் தேசிய மாநாடு, புதிய நிர்வாகம்

Social Share

Leave a Reply