இலங்கை பல்கலைக்கழககங்களில் கற்கும் மாணவர்களுக்கு பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் வழங்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் உயர் கல்விக்காக செல்பவர்களுக்கு மட்டுமே பைசர், மொடெர்னா தடுப்பூசிகள்வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு கல்விக்காக செல்பவர்கள் தங்களது ஆவணங்களை காண்பித்து கொழும்பு நாரஹேன்பிட்ட இராணுவ வைத்திய சாலையில் தடுப்பூசிகளை பெற்று கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.
நேற்று (25) இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் பெற்றுக் கொள்வதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு சென்றதையடுத்து அங்கே பதட்டமான சூழல் உருவானது.
இராணுவ வைத்தியசாலையில் நேற்றும், இன்றும் மொடெர்னா தடுப்பூசிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் 24 ஆம் திகதி தவிர்க்க முடியாத காரணத்தினால் அவை வழங்கப்பட முடியாது என இராணுவ வைத்தியசாலையில் இருந்து தனக்கு அறிவித்தல் கிடைத்தாக களனி பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். குழப்பத்துக்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பைசர், மொடெர்னா தடுப்பூசிகள்வழங்கப்படுவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
