நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாருக்கு வேண்டுமென்றாலும் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள பிரிச்சினைகளை தீர்க்க முன்வரும் அரசுக்கு தாம் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அமைச்சு பதவிகளை பெறாமலேயே இந்த ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உறையற்றும் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறார். ஆகையால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகிய நாங்கள் அவருக்கு ஆதரவாகவும், பின்பலமாகவும் செயற்படவுள்ளோம் என கூறியுள்ளார்.
