நேபாளம் – பொக்காராவில் நிகழ்ந்த விமானம் விபத்தில், விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து யாரையும் உயிருடன் மீட்கவில்லை என்று நேபாள இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
“விபத்து நடந்த இடத்தில் இருந்து நாங்கள் யாரையும் உயிருடன் மீட்கவில்லை” என நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண பிரசாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் பொகாராவில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் 72 பேருடன் பயணித்த யேட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது நேற்று விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணங்களை விசாரிக்க நேபாள அதிகாரிகள் சிறப்பு குழுவை நியமித்துள்ளனர். இந்த விசாணைக குழு 45 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
30 ஆண்டுகளின் பின் நேர்ந்த மிக கொடூரமான விபத்து இதுவென்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.