இலங்கை, வெளிநாட்டு அமைச்சின், தூதரகங்களுக்கான அலுவல்கள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு ஊடக அறிக்கை மூலமாக அறிவித்துள்ளது. கணினி வலையமைப்பு தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மிக அத்தியாவசிய சேவைகள் மட்டும் வழங்கப்படுவதாகவும், ஏனைய சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம்,திருகோணமலை, மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிலையங்களில் இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதிமுக்கிய ஆவணங்கள் வழங்கும் சேவைகள் மட்டுமே வழங்கப்பபடுமெனவும் ஏனையவை சேவைகள் தொழில்நுப்ட கோளாறுகள் சீர் செய்யப்பட்டதும் வழங்கப்படுமெனவும் மேலும் அமைச்சினால் கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஆவணங்கள் சரி பார்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்ததும் மக்களுக்கு அறிவிக்கப்படுமெனவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தாம் கவலை வெளியிடுவதாகவும் மேலும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்காக கீழுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
கொழும்பு – 0112338812
யாழ்ப்பாணம் – 0212215972
திருகோணமலை – 0262223182/86
கண்டி – 0812384410
குருநாகல் – 0372225931
மாத்தறை – 0412226713/0412226697