சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சந்தையில் சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் வாரம் அளவில் சீமெந்து விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருளாதார இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் மக்கள் கட்டுமான பணிகளை கைவிட்டுள்ளதுடன், சீமெந்துக்கான கேள்வியும் தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம் சீமெந்து மூடை ஒன்றின் விலையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.