தேசிய வைத்தியசாலையில் இன்சுலினுக்கு தட்டுப்பாடு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவில் இன்சுலின் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்சைகளுக்காக வரும் நீரிழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுவதால் நோயாளிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply