சீமெந்து விலையை குறைக்க தீர்மானம்!

சீமெந்து விலையை 300 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சீமெந்து உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.  இதன்படி சீமெந்து விலை சுமார் 400 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும், கட்டுமானத் துறையில் வேலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply