சிரியாவில் தீவிரவாத தாக்குதல்- 23 பேர் பலி!

சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் உறுப்பினர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்த வருடத்தில் ஐ.எஸ் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாக்குதலில் மற்றுமொரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினர் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply