இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (02.09) இடம்பெற்றுள்ளது.
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன் தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக இந்த அமைப்பு திகழ்கிறது.
இந்த சந்திப்பில் ஜீவன் தொண்டமானுடன், தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.