ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் அரை இறுதியில் பாகிஸ்தான்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

பாகிஸ்தான், ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான போட்டியில் 68 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆமிர் ஜமீல் 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் அயூஸ் சுக்லா 4 விக்கெட்களையும், மொஹமட் கஷன்பார் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஹொங் கொங் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாபர் ஹயாட் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். குஸ்தி ஷா பந்துவீச்சில் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply