”எமது ஆட்சியிலுள்ள அரசாங்கம் தவறு செய்திருந்தால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களால் முடியும். எனினும் அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கும் பட்சத்தில் பழைய ஆட்சியாளர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமித்து புதிய ஆட்சியை உருவாக்குங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (10/11) பங்குபற்றிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் எதிர்க்கட்;சி சரியான முறையில் ஆட்சி செய்யாதமையின் காரணமாகவே மக்கள் எம்மை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்.
இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட எதிர்கட்சியினர் ஒருபோதும் ஆட்சி செய்யாதவர்களை போலவே நடந்துகொள்கின்றனர்.
ஆகையால் தாமோ தமது ஆட்சியோ மக்களின் தேவைகளையும் அபிலாiஷகளையும் பூர்த்தி செய்ய தவறியிருந்தால் புதியவர்களை ஆட்சிக்குத் தெரிவு செய்யுமாறும் பழையவர்களை விடுத்து புதுமுகங்களை தேடுமாறும் ஜனாதிபதி மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.